மென்பொருள் வன்கொடுமைக்காரி

என்னடா அடிக்கடி தலையிலெ அல்லது நெத்திலே வீக்கத்த்தோட வர்ற?

டேய் மென்பொருள் பணியில இருக்கற பொண்ணு குண்டா இருந்தாலும் மென்மையா இருப்பான்னு அவளக் கல்யாணம் பண்ணினது தப்பாப் போச்சுட்டா.

ஏண்டா என்னடா ஆச்சு?

நான் அவளவிடக் கம்மி சம்பளம் வாங்கறவன். அதனால சமையல் வேலை வீட்டுவேலையெல்லாம் நாந்தான் செஞ்சாகணும்.நான் செய்யற சமையல்ல சின்னக் கொறை இருந்தாக்கூட பூரிக்கட்டையை எடுத்து குறிபாத்து தலமேலெயே வீசறாடா.

அடப்பாவமே மென்பொருள் வன்பொருள் ஆகிட்டது. அப்பா சாமி இனிமே நா உம் வீட்டுப்பக்கம் கண்டிப்பா வரமாட்டேண்டா. எம் மணடையாவது தப்பிக்கட்டும்.

எழுதியவர் : மலர் (11-Oct-15, 10:38 pm)
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே