கைபேசி காதல்
நண்பர்களிடமிருந்து அழைப்புக்காக
எதிர்பார்த்த நேரத்தில் வருகிறது
பெயர் அறியா எண்ணிடமிருந்து......
எண் மாற்றி அனுப்பியதாய்
மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல்
பெயரையும் கேட்கிறது குறுஞ்செய்தி...
எதிர் முனையில் பெண் எனத்தெரிந்ததும்
நட்புகொள்ளத்துடிகிறது கைபேசியும்
என் மனசும்.
பெயர்,ஊர்,விவரங்கள் தெரியாமல்
வளர்ந்தது நட்பு.
என் முயற்சிக்கு உதவி
என் தோல்விக்கு நம்பிக்கை
என் வெற்றிக்கு உறுதுணை
புரிகிறது அவளது குறுஞ்செய்தி
பின்பொருநாள் அவளிடமிருந்து
எந்த செய்தியும் வராதபோது
உணர்கிறேன் தனிமையின் வெறுப்பை.
செய்திகள் உன்னை அடையாது
எனதெரிந்தும் அனுப்பிகொண்டிருக்கிரேன்
என்னிடம் பேசவேண்டி.........
------> மனோஜ்