புவியதனில் கவியன்பர் புகுத்திடுவார் புதுமைகளை ---- தரவு கொச்சகக் கலிப்பா
கவியருவிக் குழுமத்தில் கண்டிடலாம் கவிதைகளை
செவிமுழுதும் பேரின்பம் சேர்த்திடுவர் நம்மிடமே
புவியதனில் கவியன்பர் புகுத்திடுவார் புதுமைகளை
நவின்றிடுவேன் நன்றாமே நாகினியும் சேர்ந்திங்கே .
கவிதைகளை அருவியாகக் கானமிசைக் கேட்பதற்கு
குவிந்திடுவோம் கூட்டமாக குவலயமாம் கவியருவி .
கவியரசே அழைக்கின்றார் கவிதைகளைப் பதிவிடுங்கள் .
செவிதனிலே நிறைந்துவிடும் செம்மையுடன் சொல்லிடுவேன் .
மலரணையக் கரங்களினால் மகத்தானப் பாடல்கள்
உலகறிய வனைகின்ற உத்தமராம் கவியன்பர்
பலரறியக் குழுமத்தைப் பக்குவமாய் நடத்துகின்ற
நலமறிய நாகினியும் நற்பாக்கள் புனைந்திடுவார் .
எழுதுகின்ற பாக்களுமே எத்திக்கும் புகழ்மணக்க
பழுதுமின்றி பாவலர்கள் பதியுங்கள் பாக்களையும்
விழுதெனவே படர்ந்தெங்கும் விருட்சமாக வளர்ந்துவிடும் .
எழுதுகோலை விரைந்துமே எடுத்திடுவீர் பாவனைய .

