என் காதல் தோல்வி...........
பூக்களின்மேல் தோன்றும் பனித்துளிகளைகூட
கணக்கிட்டுவிடலாம் ஆனால் உன் நினைவால்
நான் வாடிய மணித்துளிகளை கணக்கிடமுடியுமா.
வானில் தோன்றும் நட்சத்திரங்களைகூட எண்ணிவிடலாம் ஆனால் உன் நினைவால்
நான் தொலைத்த இரவுகளை எண்ணமுடியுமா.
கடலின் ஆழத்தைகூட அளந்துவிடலாம்
உன் மேல் நான் கொண்ட காதலின் ஆழத்தை அளக்கமுடியுமா................................
முடியுமானால் சொல் கண்ணே ஒத்துக்கொள்கிறேன்,
என் காதல் தோல்வியை.
--------------> மனோஜ்