மயானத்து இளவரசி 1

மயானத்து இளவரசி (இரவு 01)

நள்ளிரவு வேளை கடிகாரம் சரியாக 12 அடித்துவிட்டு களைத்துப் போனது.
தூரத்தில் உள்ள கள்ளியங்காடு மயானத்தை நோக்கி நாய்கள் குறைக்கும் சத்தம் ஏதோ ஒரு இனம் புரியாத பயத்தை நிவேதினிக்கு ஏற்படுத்தியது.
ஏதோ ஒரு ஊளைச்சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.அந்த நள்ளிரவிலும் நித்திரை வராமல் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த நிவேதினிக்கு வியர்த்து வழிந்தது.அவள் பக்கத்தில். அம்மா.அப்பா.தம்பி.தங்கை எல்லோரும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
நிவேதினி எழுத்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.தூரத்து மயானத்தில் கேட்டுக்கொண்டிருந்த நாய்களின். சத்தம். அவளது வீட்டருகில் கேட்டது.அவள் பயத்தினால் நடுநடுங்கிக் கொண்டே தேவாரம் பாடியவாறு சிறிது நேரத்தில் தூங்கிப்போனாள்.
காலையில் நிவேதினி தாமதித்தே எழுந்தாள் ஏனோ தெரியவில்லை அம்மா எப்போதும் போல் வந்து எழுப்பவில்லை.
நிவேதினி எழுந்து வாசலுக்கு வந்து வழமைபோல் வீதியைப் பார்த்தாள்.பக்கத்து தெருவில் ஜனநடமாட்டம் அதிகமாக இருந்தது.
பக்கத்து தெருவில் உள்ள வீட்டு
கமலா அக்காவின் கணவரை நேற்றிரவு பேய் அடித்து விட்டதாகவும்,அதனால் அவர் இரத்த வாந்தி எடுத்து நாக்கு நீண்டு.........
கண்களிரண்டும் வெளியில் பிதுங்கி இறந்து விட்டதாக பக்கத்து வீட்டு ராகினி ஆன்டி பேசிக்கொண்டது நிவேதினிக்கு கேட்ட போது இரவு நடந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.
அந்த அதிகாலைக் குளிரிலும் அவளுக்கு வியர்த்து வழிந்தது.
அப்போது திடீரென.......

( இன்னும் பேய் வரும்)

எழுதியவர் : காவ்யாஞ்சலி (19-Nov-15, 6:12 pm)
சேர்த்தது : தேவாதேவா
பார்வை : 147

மேலே