சங்ககால விளையாட்டுப்பெயர்கள்

சங்க இலக்கியம் தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்து வைத்திருக்கிற ஆவணமாக விளங்குகிறது என்பது திண்ணம். தமிழர்களின் மறவாழ்க்கையில் விளையாட்டு மிக நெருக்கமுடையதாக இருந்திருக்கிறது. உலகத்தில் மாந்தரினத்தார் எவரும் விளையாடாமல் இல்லை. விளையாட்டுகள் அந்தந்த நாடுகளுடைய சூழல் மனித அறிவாற்றல் இவைகளுக்கு தகுந்ததுபோல் அவர்களாலேயே கட்டமைத்துக்கொள்ளப்பட்டன. ஆதி மாந்தன் இயல்பாய் ஓடியதும், நீந்தியதும் மலையிலும் மரத்திலும் ஏறியதும் பின்னாளில் விளையாட்டாய் முகிழ்த்துவிட்டது. விளையாட்டின் நோக்கம் மனமகிழ்ச்சியை பெறுவதாக இருக்கவேண்டும். அதன் மூலம் அறிவுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை ஈட்டிக்கொள்ள வழிவகைக்கிடைக்கும். சங்கத்தமிழர்களின் விளையாட்டுகளும் அவ்வழிப்பட்டதே ஆகும்.
தமிழர்களும் விளையாட்டுகளும் :
தொல்காப்பியர்,
"செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று
அல்லல் நீத்த உவகை நான்கே "1
என்கிறார். இதன் பொருள் செல்வத்தால் ஏற்படும் நுகர்ச்சியாலும், புலமையால் ஏற்படும் அறிவு முதிர்ச்சியாலும், உள்ள இணைப்பாலும் உள்ளம் ஒத்தாரோடு கூடி ஆடும் விளையாட்டாலும், துன்பம் நீங்கிய மகிழ்ச்சி தோன்றும் என்பதாகும். இக்கூற்றிலிருந்து இன்பம் தருவதே விளையாட்டின் நோக்கம் என்பது தெளிவாகிறது. விளையாட்டில் எவர்மனமும் புண்படாமல் விளையாடுவதுதான் மிகமுக்கியம். ஒருவரின் உள்ளத்தை காயப்படுத்தி விளையாடுவது நல்விளையாட்டு இல்லை. சங்க நுல்களில் குறுந்தொகையும்2, அகநானூறும்3 விளையாட்டை மகிழ்ச்சியின் மையப்பொருள் என்கிறது.
விளையாட்டு என்னும் சொல்:
சங்க இலக்கியத்தில் விளையாட்டு என்னும் சொல்லானது பலவடிவங்களில் இடம்பெற்று இருக்கிறது. விளையாட்டு 3 இடங்களில் 4, விளையாட 5 இடங்களில் 5, விளையாடல் 3 இடங்களில் 6


சான்று எண்:
1.தோல்.பொருள்.1205
2.குறு.394.6
3.அக.302.7
4.குறு.394.6, கலி.27.16, அக.230.6
5.பட்.77, நற்.194.8, ஐங்.406.1, அக.250.5, புற.320.5
6.நற்.123.11, குறு.401.5, அக.302.7

எழுதியவர் : vimalraj (4-Dec-15, 6:26 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
பார்வை : 292

மேலே