நாம் வளர்ச்சி அடைகிறோமா

நம் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பலரும் நெகிழ்ந்து கூறுகின்றனர்.ஆம், வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான்.இருப்பினும்,வளர்ச்சி என்பது யாதென முதலில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
ஒருபுறம் தொழிற்சாலைகள் வளர்ந்து,அந்நிய செலவாணி அதிகரித்தால்,
பண வீக்கம் குறைந்து நாம் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்றாகாது!
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்,
நம் உடலில் உள்ள பாகங்களில் ஒன்று மட்டும் இயல்பிற்கு மாறாக பெரிதாக வளர்ந்தால்,அதை வளர்ச்சி என்றா கூறுவோம்?!எண்ணிப் பாருங்கள் அதன் பேர்
(ஊனம்) மாற்றுத்திறன் ஆகும்.
ஆம்,நம் நாட்டின் தற்போதைய நிலையும் இது தான்,இதைப் போன்ற வளர்ச்சியை தான் அடைந்து வருகிறோம். ஒருபுறம் தொழிற்சாலைகள் பெருகினால்
மறுபுறம் விவசாயி கொத்தடிமை வேலைக்குச் செல்கிறான்.லட்சாதிபதி கோடீஸ்வரன் ஆகிறான்.ஆனால்,நடுத்தரவாதியோ ஏழையாகிறான்,ஏழையோ வாழ வழியின்றி சாகிறான்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றாங்கே
தொழுதுண்டு பின்செல் பவர்.
என்றான் வள்ளுவன்.
உழவனே வீழ்ந்தால் நாம் பின்னர் வெறும் பணத் தாள்களையா உண்ணப் போகிறோம்?!!
வளர்ச்சி என்பது நம் தொழில்முறை சார்ந்ததாக அமைதல் வேண்டும்.
விவசாயத்தில் விஞ்ஞானம்,
பாமரனுக்கு அதிக வாய்ப்பு,
மீனவனுக்கு உயிர்ச்சுதந்திரம்,
லஞ்சம் ஊழல்லில்லா தலைமை,
விஞ்ஞான கல்விமுறை.
இதை போன்று அனைத்திலும் ஒரு சேர வளர்வதுவே வளர்ச்சியாகும்.இவ்வாறு நடக்கும் வரை நாம் ஒருவேளை வளர்ச்சி அடைந்தாலும் அதை பெருமையாய் கூறினாலும் ஒரு பயனும் இல்லை!!

-லோகேஷ்கண்ணன் ச

எழுதியவர் : லோகேஷ்கண்ணன் ச (4-Dec-15, 11:38 pm)
சேர்த்தது : லோகேஷ்கண்ணன் ச
பார்வை : 831

சிறந்த கட்டுரைகள்

மேலே