விடியலின் முடிவு

இணைக்க முடியா சிறு சிறு காகித துண்டுகளை போலவும்
சேர்க்க முடியா உடைந்த கண்ணாடி துண்டுகளாகவும்
நம் வாழ்க்கை நம்மை சிதறடிக்கிறது.....
மழை நாளில் காணா வெயிலாகவும்
வெயில் நாளில் கை சேரா கானல் நீராகவும்
வெறுமையுடன் கடக்கிறது...
நித்தம் நித்திரையில் காணும் கனாக்கள் கலைகின்றதே
இமை பொழுதிலும் நொடிகள் கடக்கையில்
மனித முகங்கள் மறைகிறதே....
நாட்காட்டியில் நாட்கள் கிழிக்கப்படுகையில் புது
விடியலின் தொடக்கம் என வியந்து பின் தவிக்கிறேன்......
அத்தனை போராட்டமும் கலையும் நிமிடம் இது கனவன்றோ?
என தவிர்க்க முயன்று தோற்கிறேன்.......

எழுதியவர் : சத்யாதுரை (6-Jan-16, 9:32 pm)
Tanglish : vidiyalin mudivu
பார்வை : 156

மேலே