வாழ்க்கை ஒரு பரமபதம் 555

என் தோழியே...

துன்பங்கள் மட்டும்தான்
உன் வாழ்வு என்று வருந்தாதே...

துன்பங்கள் பல வந்தாலும்
உன் வாழ்வில் நீ துணிந்து நில்...

சாதனைகள் படைத்துவிட்டு
சாவதென்று தீர்மானித்துக்கொள்...

நாளை சவபெட்டிகூட உன்னை
சுமப்பதால் சந்தோசப்படும்...

வாழ்க்கை என்பது
பரமபதம்போல்...

ஏணி உன்னை ஏற்றிக்கொண்டு
உச்சிக்கு செல்லும்...

பாம்பு உன்னை கொத்தி
பாதாளத்தில் இறக்கிவிடும்...

பாம்புக்கு பயந்து
நீ படுத்துவிட்டால்...

உன் வாழ்க்கை ஏணியில்
எப்படி ஏறபோகிறாய் நீ...

தடைகளை கடந்து
நீ நிமிர்ந்துநில்...

சாதனைகளை நீ
எளிதாக படைப்பாய்...

உலகம் அழியும்வரை
உன் சாதனைகள் அழியாது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Jan-16, 8:30 pm)
பார்வை : 343

சிறந்த கவிதைகள்

மேலே