கற்பனையும் ஏதுமில்லை

கற்பனையும் ஏதுமில்லை !
கானகத்து குரங்குகளுக்கு
கவலைகள் ஏதுமில்லை!
வானத்து பறவைகளுக்கும்
வஞ்சமும் ஏதுமில்லை !
துள்ளியோடும் மீன்களுக்கோ
துளி-கவலை ஏதுமில்லை
கள்ளமில்லா குழந்தைகளுக்கு
கற்பனையும் ஏதுமில்லை !
நானிலத்தில் வாழ்வோருக்கே
நால்வகையாய் கவலைகளுண்டு!
நானே நல்லவன் நானே வல்லவன்
வீணே புலம்பி பொருமுகின்றான்
கவலைகளும் இல்லாமல்
வஞ்சகமும் இல்லாமல்
களித்திருப்போம் நாமெல்லாம்
காலங்கள் ஏதுமில்லையே !
---- கே. அசோகன்.