படைப்புகள் - அகம் புறம் - ஒரு சிறு பார்வை

அகம்
• நாம எல்லாம் எழுதினா போட மாட்டாங்க சார். அவங்களுக்குன்னு ஒரு குருப் வச்சிருக்கிறாங்க, அவன்க எழுதினாத்தான் போடுவாங்க.
• நானும் 15 வருஷமா எழுதிகிட்டுத்தான் இருக்கேன் சார். ஒரு பயலும் மதிக்கிறதே இல்லை சார்.
• சார், இவன்க எல்லாம் உள்ளுர் எழுத்தாளர்களை கொண்டா மாட்டாங்க, ரஷ்யா எழுத்துக்களை மட்டும் கொண்டாடுவாங்க.
• முழு நேர படைப்பாளிகள்ன்னு யாரும் இல்ல சார். பொழுது போக்குக்காக படைக்கிறாங்க சார். அப்புறம் என்ன படைக்க முடியும்?
• ஒரு வார பத்திரிக்கைக்கு ஒரு கவிதை எழுதி அனுப்சேன். நல்லா இருக்கு, நல்லா இல்ல அப்படீன்னு கூட பதில் அனுப்ப மாட்டேங்கறாங்க சார்.
• எல்லாரும் ஈகோ புடிச்சவங்களா இருக்காங்க சார். அவன் தான், அவன் குருப்புதான் ஒஸ்தின்னு நினைக்கிறாங்க.
புறம்
• படைப்பாளிகள் யாருமே படிக்கிறதே இல்ல சார். நினைச்சத எல்லாம் எழுதினா எப்படி சார் பத்திரிக்கையில போட முடியும்.
• தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனோ இல்லையோ, பேனா புடிச்சவன் எல்லாம் கவித, கட்டுரைன்னு எழுத ஆரம்பிச்சா என்ன செய்ய முடியும். எல்லாருக்கும் சுஜாதான்னு நெனப்புசார்.
• இலக்கிய பத்திரிக்கைன்னு போட்டேன் சார். 100 கவிதை வந்திருக்கிறது. என்னா செய்யறது சொல்லுங்க.
• கதை, கவிதை கட்டுரைன்னு எழுதறாங்க சார், வல்லினிம் ஒற்று, மெய் எழுத்து மிகும் இடம், மிகா இடம் எதுவுமே தெரியல, அப்புறம் எப்டி நாங்க படிச்சி பப்ளிஷ் பண்ண முடியும்.
• இருக்கும் ரோஜா தோப்பில் அழகான் ஒரு செடி நீ மட்டுமே - இப்படி கவிதை எழுதினா என்ன சார் செய்யறது? (காதுகளில் மெதுவாக - அழகான் - அழகானன்னு கூட தெரியல. அதுல கூட தப்பு பார்த்தீங்களா )
• ஒரு புஸ்தகம் போடறது எவ்வளவு கஷ்டம்ன்னு இவன்களுக்கு தெரிய மாட்டேங்குது. அதான் சார் ப்ராபளமே
• லாசரா வோட ஜனனி படிச்சிருக்கிறியா, குபாரா வோட விடியுமா படிச்சிருக்கிறியா, 4 படைப்பாளிகள் பேரை சொல்லி கேட்டா இவங்கள் எல்லாம் யாரு அப்படீங்கறாங்க. என்ன செய்ய சொல்றீக.
• புஸ்தகம் போட்டா Review பண்றேன்னு ஒரு குருப் எல்லாதையும் வாங்கிட்டு போயிடுது. இதுல என்னா மிஞ்சும்ன்னு நினைக்கிறீங்க?

TRB Rating கம்மியாக இருப்பதால் இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைகிறது.

எழுதியவர் : அரிஷ்டநேமி (6-Feb-16, 12:55 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 270

மேலே