பூட்டிட்ட மனம்

இருள் மூண்ட பார் காண
ஒளி சுடராய் தீபம்
ஏற்றி அவசர அவசரமாய் மானிடன்
துயில் கலைத்த கதிரவனே!
அறிவியல் ஆக்கம் உண்டாக முக்கிய
காரணியான எங்கள் முன்னோடியே!
அன்று மானிட மனம் சுடரொளியாய் - உன்னை
காட்டிலும் பிரகாசமாய் திகழ்ந்ததே!
மனித வர்கத்திற்க்கு வழிகாட்டியாய் நின்ற
விண் அரியனையின் சீமானே!
இன்று மானிட மனம் இருள்
சூழ காரணம் ஏனோ!
சுருக்கம் அடைந்த மேனி மண்ணறை
சென்று துயில் கொள்ளுமோ!
இருக்கம் கொண்ட மனம் யாரை
தேடி எங்கே செல்லுமோ!

-ஆதங்கத்துடன்
புகழ்விழி.

எழுதியவர் : புகழ்விழி (18-Feb-16, 11:21 am)
பார்வை : 99

மேலே