என் கண்ணே
வண்ணப் பட்டுடுத்தி
கால் கொலுசு சிலுசிலுக்க
கை வளையல் கிலுகிலுக்க
காதில் ஜிமிக்கி நடனமாட
வெண் தாமரை
முகத்தின் அழகிற்கே
அழகாய் புன்னகை
பூத்தவளாய்......
நீ
என்னை கடந்து போகயிலே
என் மனம் தடமாறியதடி.....!
புழுவாக கூட்டுக்குள்
அடைந்து கிடந்து
பின்....
வண்ணப் பட்டுடுத்தி
பறந்து வரும்
வண்ணத்துப் பூச்சி போல்...
என் மனதில் இருந்த
அன்பு...
உன்னைக் கண்டதும்
காதலாகி...
உன் பின்னால்
பறக்க ஆரம்பித்துவிட்டதடி
என் கண்ணே......!

