எங்கே இறைவன் பகுதி -2
எங்கே இறைவன். ..?
பகுதி -2:;
(இந்த பதிவில் தவறுகள் இருப்பின் எமக்கு தெளிவு படுத்தும் படி கேட்டு கொள்கிறேன்.
தவறு இருந்தால் மன்னிக்கவும் )
விநாயகர் என்பவர் உன்மையில் கடவுள் தானா..?
(உண்மையில் இந்த கேள்வியை இங்கே எழுப்பட்டதர்க்கு என்ன விபரீதங்கள் ஏர்படும் என்று தெரியவில்லை. ..பார்ப்போம். )
நான்மறைகளில் ஒரு இடத்தில் கூட வினாயகரை குறிப்பிட்டதாக தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.
தொல்காப்பியத்திலும் விநாயகர் பெயரின் அடிச்சுவடே இல்லை என்றே நான் அறிகிறேன்.
நாம் அறிந்த வரையில் விநாயகர் பற்றிய செய்தி மகாபாரத கதையில் தான் முதன் முதலில் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதுவும் விநாயகர் பெருமான் மகாபாரத கதையை எழுதுவது மூலமாக. ...
சமஸ்கிருத மொழியானது ஆதி முதல் அதர்க்கு எழுத்து வடிவம் கிடையாது. இடைக்காலத்தில் தான் அதர்க்கு எழுத்து வடிவம் கிடைத்தது.
யுகங்களின் கணக்கு படி சுமார் 12000 வருடத்திற்கு முன் நடைபெற்ற ராமாயண கதையை அக்காலம் கொண்டு செவிவழியாக கேட்டு. .
சமஸ்கிருதம் எழுத்து வடிவம் பெற்றவுடன் எழுதி வைத்து விட்டார்கள்.
இதேபோல் தான் மகாபாரதமும்
..
எழுதப்பட்டது ஒரு காலமும் நடைபெற்றது ஒரு காலமும் இருந்தமையால் இன்றளவும் மக்களிடையே பல புனை கதைகள் வலம் வருகிறது.
விநாயகர் கடவுள் இல்லை. ..
அவரும் ஒரு வகை உருவாக்க வழிபாட்டு சின்னமே...
கி.மு-300-கி.பி300 இந்த இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களின் வருகை தென்னிந்தியாவில் அதிகரித்தது.
பஞ்சம் பிழைக்க வந்த அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளயும் பரப்பினார். இதன் காரணமாகவே தென் நாட்டில் சமண மதமும் அதுவரை இல்லாத இராமாயணம் மற்றும் மகாபாரத கதைகள் மக்களிடையே பரவியது.
(மதுரை அழகர் கோவில் கூட சமணர் கோவில் தான். பிற்காலத்தில் பெருமாள் கோவிலாக மாற்றம் பெற்றது. தமிழகத்தில் ஏற்பட்ட மதப்பூசலுக்கு இதுவே பிரமாண்டமான சாட்சி. மற்ற கோவில் கட்டிட கலையும் அழகர் கோவில் கட்டிட கலையும் வேற்றுமை கொண்டது. )
விநாயகர் பெருமானை உருவ வழிபாட்டு சின்னம். .குலதெய்வ வழிபாடு என்ற முடிவுக்கு வர காரணம். .நான்மறைகளிளும் எந்த சான்றும் இல்லை.
ஆரியர்களின் யானை படையினரின் குலதெய்வமாக இருக்கும் என்பது என் எண்ணம்.
ஆனால் கண்டிப்பாக தமிழர் கடவுள் இல்லை. அவர் வட இந்தியாவில் இருந்து திருடப்பட்டு தமிழகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களால் வணங்கபடுகிறார்.(சிவகாமியின் சபதத்தில் நடைபெற்றது போல்)
இந்த திருடப்படும் வழக்கம் இன்றளவும் மறையவில்லை. இப்போதும் கூட புது கோவிலுக்கு விநாயகரை திருடி கொண்டு தான் பிரதிஷ்டை செய்வார்கள்.
ஆனால் இந்த இயற்கை தானே கடவுள். பிறகு எதர்க்கு கடவுளின் குடும்பங்கள். .அதர்க்கு சில கதைகள். ..இதெல்லாம் எதர்க்காக. .?
நம் முன்னோர்கள் மனித வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கை நெறியை சொல்லவே இந்த குடும்ப முறையில் வகுத்தனர்.
அதனை சாதாரணமாக சொல்லி இருந்தால் கேட்டிருப்போமா...?
அதனால் தான் கடவுளை இந்த குடும்ப உறவு முறைக்குள் சிக்க வைத்தார்கள். ...
பகுதி -2.....
முற்றும். ..!