10 செகண்ட் கதைகள் - மேதாவி

ஒரு மெத்தப் படித்த மேதாவி 50 ரூபாய்க்கு புத்தகம் வாங்கச் சென்றார்.

அந்தப் புத்தக விற்பனையாளர் ஒரு ரசீதைக் கொடுத்து
"அய்யா! நாங்கள் புத்தக விற்பனையை மேலும் ஊக்குவிக்க எண்ணி உள்ளோம். புத்தகம் வாங்குபர்களுக்கு குலுக்கல் முறையில் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவோம் " என்றார் .

மேதாவிக்கு முதல் பரிசு ஒரு கோடி ரூபாய் கிடைத்தது.

பரிசை வாங்கப் போன இடத்தில் அவருக்கு 75 லட்ச ரூபாய் கொடுத்தார்கள். மீதம் 25 லட்சம் வரியாகக் கட்டப் படும் என்று நிறுவனம் சொல்லி விட்டது.

மேதாவிக்கு வந்ததே கோபம். புத்தக நிலையத்தாருடன் ஒரே சண்டை.வாக்கு வாதம் இறுதியில் , "எனக்கு ஒரு கோடி தருவதாகத் தான் கூறினீர்கள் . கொடுப்பதானால் ஒரு கோடி கொடுங்கள். இல்லை எனில் என் 50 ரூபாயை திருப்பிக் கொடுங்கள்." என்று சொல்லி புத்தகத்தை திருப்பிக் கொடுத்து 50 ரூபாயை திருப்பிக் வாங்கிக் கொண்டு போய் விட்டாராம்.

மேதாவிக்கு 75 லட்சம் கிடைக்காமல் போனது , புத்தகத்தையும் படிக்காமல் போனார்.

பி.கு: அரசியல் துணுக்கு:
இப்படித்தான் சில மேதாவி கொள்கையாளர்கள் திமுக பல நல்ல கொள்கைத் திட்டங்களை செய்திருந்தும் தவறிப் போன ,சிலவற்றிகு வருந்தி உள்ளதையும் ,நல்லதையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எழுதியவர் : செல்வமணி (19-Apr-16, 9:18 am)
பார்வை : 118

மேலே