என்ன செய்றது
ஸ்கூல் லீவ் விட்டதும் காலங்காத்தால டிபன் சாப்டுட்டு கிளம்பினா,
முதல்ல கீதா அக்கா வீட்ல கேரம், அடுத்து ரமணி அக்கா வீட்ல
சீட்டு, அப்டியே ஈஸ்வரி அக்கா வீட்ல தாயம்னு மத்தியானம் வரைக்கும் ஒரே ஆட்டம்தான்.
ஒருதடவைக்கு பல தடவை பெத்தவங்க எங்கபேரைச் சொல்லி
ஏலம் போட்டபிறகு, வேக வேகமா வீட்டுக்கு ஓடிப்போய்
மத்தியான சாப்பாட்ட சாப்டுட்டு திரும்பவும் வீடுவீடா ஏறி இறங்குவோம்.
சாயங்காலம் ஆனதும் பாண்டி, திருடன் போலீஸ், கிட்டி புள், பம்பரம், கோலிக்கா, அஞ்சாங்கல்லுன்னு பையன், பொண்ணு வித்தியாசமில்லாம எல்லாருமா சேந்து விளையாண்டதை இப்ப நினச்சா கூட மனசு துள்ளுது.
ஆனா இன்னைக்கு 5 வயசு குழந்தைக்கு கூட குட்டச், பேட்டச்
சொல்லிக்குடுத்து வளக்க வேண்டியிருக்கு.
லீவ் விடுறதுக்கு முன்னாடியே கணினி, யோகா, நீச்சல், செஸ்,
அபாக்கஸ், கீபோர்டு இப்டி ஏகப்பட்ட கோச்சிங் வகுப்புகள பத்தி
விசாரிச்சி அங்க கொண்டுபோய் சேத்துவிட்றோம்.
ஒவ்வொரு சமயம் நினக்கும் போது ஆயாசமாக்கூட வருது.
சுதந்தரமா பறக்க வேண்டிய கிளிகளோட சிறகுகள முறிச்சி கூண்டுல வச்சி போஷாக்கா வளக்குறது மாதிரி நம்ம குழந்தங்களையும் செய்றோமேன்னு. ஆனாலும் போட்டி, பொறாமைகள் அதிகமா இருக்குற இன்றய நாளைய உலகத்துல அவங்க சுயமா வாழ்றதுக்கு
வெறும் படிப்பு மட்டும் பலன் தராதுங்கற உண்மையும்
தெரியுறதுனால வெறுமனே பெருமூச்சு மட்டும் விடுற நிலையில இருக்கோம். என்ன செய்றது!

