காவடிச் சிந்து

காவடிச் சிந்து - 1

வெற்றிவடி வேலனடி அம்மே - வரும்
வேதனைகள் தீர்த்திடுவான் அம்மே - அவன்
வெல்ல மொழிகளில் மெல்ல விழமனம்
வேண்டும் - படி தாண்டும் !
கொற்றவனின் கோலவெழில் காட்சி - உடன்
கொஞ்சிவரும் வண்ணமயில் ஆட்சி - சுடர்
கொன்றை அணிந்தவனின் கன்றை வணங்கவிதிக்
கோரம் - அது தீரும் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (4-May-16, 12:26 pm)
பார்வை : 76

மேலே