காந்தனது பேரழுகு தான்விரும்பும் பெண் - நீதி வெண்பா 81
பெண்ணுதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே
எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் - நண்ணிடையில்
கூரியநல் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது
பேரழுகு தான்விரும்பும் பெண். 81 – நீதி வெண்பா
பொருளுரை:
பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது அவளுடைய தகப்பன் மணமகனுடைய கல்வியை விரும்புவார்;
பெண்ணைப் பெற்ற தாய் அளவற்ற செல்வத்தை விரும்புவாள்
இவர்களுக்கு இடையில் சிறப்பு பொருந்திய நல்ல சுற்றத்தார் நற்குடும்ப பாரம்பரியத்தை விரும்புவர்.
பெண்ணோ வரும் கணவனது பேரழகையே விரும்புவாள்.