over action
பொதுவாக சிவாஜி மேல் சிலர் சொல்லும் ஒரு குறை "over action"..stero performance
பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி..
அன்றைய காட்சியான "தன் மனைவியின் உடல் முன் குமுறி அழுது துடித்து விட்டு",செட்டில் உள்ள அனைவரையும் அழ வைத்து,அவர்கள் பாராட்டையும் பெற்று கொண்டு,தன அறையில் கம்பீரமாக நுழைகிறார் அவர்..
உள்ளே நடிகர் சோவும் எதோ விஷயமாக பேச வருகிறார்.சம்பாஷனை தொடர்கிறது..
"என்னடா? ஷாட்டை பார்த்தாயா?"
"ஓ.பார்த்தேன் சார் நல்ல இருந்தது!"
"என்னடா இழுக்கறே?ஒனக்கு அவ்வளவா ரசிக்கல இல்ல?"
பொய் சொல்லி பழக்கம் இல்லாத சோ வும் சொல்கிறார்,
"உண்மை சார்.நீங்க என்னமோ ரொம்ப அழுது புரண்டால் போல எனக்கு தோணிச்சு.இத சொன்னதுக்கு மன்னிச்சுடுங்க!"
அவர் எழுகிறார். ஒரு மேஜையை காட்டி "இங்கு அவள் உடல் இருக்குன்னு வச்சுக்கோ.இப்படி நடிச்சிருக்கனும்னு சொல்றே இல்லையா?"
உடனே சோ வியப்படைய, ஒரு தளர்வான நடை நடந்து,அந்த ஷாட்டை முற்றிலும் வேறு விதத்தில் நடித்து முடிக்கிறார்.
"சார் சார் அற்புதம் சார் பிச்சுட்டீங்க! என்ன ஒரு reaction!! என்ன ஒரு expression! இத தான் சார் நீங்க செஞ்சிருக்கணும்"
"போடா முட்டாள்..இந்த மாதிரி நடிச்சா நீ மட்டும் தான் ரசிப்பே! நான் நடிச்சது எல்லாரும் ரசிக்க,"

