கருப்பு பணம்
கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ரூ.99, ரூ.199, ரூ.999, ரூ.1,999 என ஏன் விலையை நிர்ணயம் செய்கிறார்கள் தெரியுமா??
உதாரணத்திற்கு Big Bazaar கடையை எடுத்துக்கொள்வோம். இந்த கடைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் சென்றாலும், அவர்களில் ஒரு 500 பேர் ரூ.999-ல் மீதியுள்ள ஒரு ரூபாயை வாங்க மாட்டார்கள்.
இப்படி ஒரு வருடத்திற்கு ஒரு கடை மூலம் 365×₹500 என மொத்தம் 1,82,500 ரூபாய் கடைக்கு வருமானம் கிடைக்கிறது.
பிக் பஸார் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 1,500 கிளைகள் உள்ளன. இதன் அடிப்படையில், 1,82,500×1,500 எனக் கணக்கிட்டால் ஆண்டுக்கு 27 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
அதாவது, நாம் வாங்காமல் விடும் அந்த ஒரு ரூபாய் நமக்கு கொடுக்கப்படும் பில்லில் சேராது. அதனால், இந்த 27 கோடியே 37 லட்சத்துக்கு அவர்கள் வரி செலுத்தவும் தேவையில்லை...!!
இதை ஒரு பிக் பஸார் கடையுடன் மட்டும் ஒப்பிட வேண்டாம். தற்போது ஒவ்வொரு சிறு, பெரு கடைகளும் இதே உத்தியை தான் பயன்படுத்தி வருகின்றன.
# இப்ப யோசிங்க...கருப்பு பணம் உருவாக மறைமுகமாக வாடிக்கையாளர்களாகிய நாமும் ஒரு காரணமா இருக்கோம்!!