எதுக்குங்க சுதந்திரம் வாங்கினாங்க

எதுக்குங்க நம்ம முன்னோர்கள் போராடி சுதந்திரம் வாங்கினாங்கனு பெரியவர் ஒருத்தர்கிட்ட கேட்டேன்!!!! அவர் சொன்னது !!

1) நம்ம மக்கள் மேல நிறைய வரிகள் விதிச்சாங்க
2) வெளிநாட்டு பொருளெல்லாம் நம்ம நாட்டுல வந்து சந்தைப்படுத்த பார்த்தாங்க
3) நம்ம இயற்கை வளத்த அழிக்க பார்த்தாங்க
4) ஆங்கிலத்த அடுத்த தலைமுறை பிள்ளைகள் மேல திணிக்க பார்த்தாங்க. தாய்மொழி கல்வியே அழிஞ்சிருக்கும்.
5) உள்ளூர் தொழில் மற்றும் விவசாயத்த அழிக்க பார்த்தாங்க
6) வெளிநாட்டு மோகத்த பரப்ப நினைச்சாங்க.
7) நம்ம இயற்கை வைத்தியத்தை அழிச்சு மேல்நாட்டு மருத்துவத்த கொண்டு வர பார்த்தாங்கனு அடுக்கிட்டே போனாரு !!!!

நான் சிரிச்சுட்டே வந்துட்டேன் !!!

எழுதியவர் : செல்வமணி (30-Aug-16, 10:33 pm)
பார்வை : 196

சிறந்த நகைச்சுவைகள்

மேலே