உண்மையில் சுதந்திரம் பெற்றோமா
![](https://eluthu.com/images/loading.gif)
உண்மையில் சுதந்திரம் பெற்றோமா ?!
----------------------------------------------------
ஒரு வார்த்தை `சுதந்திரம்`
ஒருநாள் இரவில் கொடுத்தான்
வெள்ளைக்காரன் விடியவில்லை இன்னும் ...
நடுநிசி வேண்டாம் நண்பகலில்
படுபாவி வெட்டிக் கொன்றான்
உண்மை காதலைக் கொன்றான்...
பெற்றுவிட்டோம் சுதந்திரம் பெயரளவில்
பெறவில்லையே பெண்ணுக்கு மனதளவில்
சிறகொடிக்கும் கயவர் கூட்டம் -இங்கே
சிறு பிள்ளை வன்புணர்வு வெறியாட்டம்...
மரமாகிப் போன மனங்களில் முதலில்
வரவேண்டும் சுயமாய் சுதந்திரம்
அதுவரை நாம் பெற்றுவிட்டோமா சுதந்திரம்
விடையில்லை வினாவே இது ?
கவிஞர் .சுசிமணாளன் சுக்காம்பட்டி ,திருச்சிராப்பள்ளி இந்தியா .
9791334346