பிரிந்து போனவளே

பிரிந்து போனவளே
என்னை தொலைத்து போனவளே!
கண்கள் இருப்பது
கனவு காண மட்டுமா?

நாம் அன்பில் கலந்து
அசைவாடிய நினைவுகள்
கலந்து நெஞ்சில் நிழலாட பெண்ணே.

என்னை விட்டு எங்கோ
தொலைந்து போனாய்
முகவரி இல்லாத கடிதம் நான்.

எனக்கு யார் முகவரி தருவார்
உன்னை விட்டு?

ஆனாலும் இது
அதிகம் தான் இப்போது!
உனக்கென ஒரு உலகம் உதித்திருக்கும்
உன் நொடிகள் கூட
கணக்கிடப்பட்டு
கடிகார முள் விட வேகமாய்
அதிர்ந்து சுற்றும் உன்
அன்றாட பணி சுமைக்கிடையில்
இந்த அந்நியன்
கடந்து போவதுதான் கண்ணியம்

அந்த ஏகாந்த
கனவு மூட்டைகளை
மீண்டும் நான் சுமந்து போகிறேன்.....

நாம் இனியொரு முறை
சந்திப்பது சாத்தியமில்லை
அதில் எந்த
பாக்கியமும் இல்லை
.
சந்தித்தோம்....பிரிவோம்
பிரியமானவளே....

உன் பகிர்வுக்கும்
பாசத்திற்கும்
நெஞ்சார்ந்த ..........கள்..

எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (13-Sep-16, 10:56 pm)
Tanglish : pirinthu ponavale
பார்வை : 245

மேலே