அதுக்கும் மேல

வெளியே பூமியை மழையடிக்கும் நேரமெல்லாம்,
நீ எனக்குள் இடிகள் தருவது உறுதி.....இதயத்தில் காதலால்!!

மழையில் நீ நனைந்து வருகையில்,
என்னுள் விபத்துகள் நடக்குதடி...வேகக் கட்டுப்பாடின்றி!

மழையுடன் குழித்த உன் காலணியும்,
புத்துயிர் பெற்று கடிக்கத்தொடங்குதடி .....புதுக் காலணிபோல!

நீ உதறிய நனைந்த ஈரத்துப்பட்டாவின் சாரலில் ,
கங்கா ஸ்நானம் கொண்டு சாதுவாகிப் போனேனடி...!

இனி இறந்த பிறகும்., மீண்டும் வருவேன் .....மழைவரும் காலங்களில் உனக்காக!!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 11:26 am)
பார்வை : 76

மேலே