தீப ஔி திருநாள்

வெளிச்சத்திருநாள்

நட்சத்திர தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகிறது
வானம்...

பூக்களின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றன
சோலைகள்...

விழிகளின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றனர்
காதலர்கள்...

பாச தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றனர்
நண்பர்கள்...

கவிதைகளின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றனர்
கவிஞர்கள்...

அன்பின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகி்றது
அகிலம்...

வீடெல்லாம் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுவோம்
வெளிச்சத் திருநாளை...

இதய தீபங்களின்
வெளிச்சத்தில்

அகலட்டும்
அறியாமை...

மறையட்டும்
இருளின் பொய்மைகள்...

அழியட்டும்
தீமைகள்...

வாழ்த்துங்கள்
வசவுகள் மறந்து போகும்
வன்மங்கள் மறைந்து போகும்...
மலரும் மனிதநேயம்...

வெளிச்சங்களுக்கான
திருநாள் இது...
வெளிச்சத் திருநாளை
போற்றுவோம்.

தீப ஔி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

எழுதியவர் : நிலாரவி (27-Oct-16, 7:04 pm)
பார்வை : 589

மேலே