மான்விழியே மயக்கமென்ன
மான்விழியே மயக்கமென்ன
மன்னவன் நானருகில் வந்ததா
எனைநினைத்த ஏக்கத்தின் விளைவா !
மங்கையே உன்விழிகளில் கண்டேன்
வழிந்திடும் காதலை அருவியென
தெளிந்திடு நீயும் அணைத்திடு என்னை !
கயல்விழிக் கொண்டு தொடுத்திடுவாய்
காதலெனும் அம்பையும் எய்திடுவாய்
காளையும் வீழ்வேன் கன்னியுன் காலடியில் !
உன்னழகை ரசிக்கின்றேன் உண்மையாய்
சுவைத்திடவும் துடிக்கிறேன் பெண்மையை
சம்மதம் அளித்திடு சமயத்தை நீசெப்பிடு !
தாழ்த்தாதே காலத்தை தாங்காது என்மனம்
வீழ்த்தாதே என் விழைவை விளைவறியாது
மறுக்காது நிறைவேற்று என் விருப்பத்தை !
தேனமுது சுவையான தேமதுர இதழாளே
கானமது ஒலிக்குது தென்றலும் வருடுது
காதல் கோட்டையில் காலமும் வாழ்வோம்
இன்பத்தில் திளைத்து நேரத்தைக் கழிப்போம் !
மான்விழியே மயக்கமென்ன இனியும்
தாரகையே தயக்கமென்ன தடையில்லை
விடியும்வரை மகிழ்ந்திருப்போம் நாம்
விடிந்தப்பின்னும் தொடர்வோம் நாம் !
பழனி குமார்