ஊர்திகளின் புதுமொழி

ஊர்திகளின் புதுமொழி

அழகாய் பவனி வருகின்றேன்
அனைவரையும் அன்பாய் சுமந்திட்டே
புவியின்றி விண்ணிலும் நாந்தானே
புதுவடிவினில் தானே மிளிர்கின்றேன்

ஏற்ற தாழ்வின்றி அனைவரையும்
எழிலுடன் நாளும் தாங்கி வந்தே
எங்கும் என்றும் எப்பொழுதும்
எதற்காயினும் அதற்கெல்லாம்
இன்முகம் காட்டி உதவுகின்றேன்.

பறவை போன்றும் பறக்கின்றேன்
பரவை தனிலும் மிதக்கின்றேன்
பாரினில் எனை ஓர் அதிசயமாய்
படைத்திட்டப் பெருந்தகையின் காணிக்கையாய்

பாடாய் படுத்தும் சிலரினையும்
சினமின்றி நானே சுமக்கின்றேன்
சீரிய பணிய ஆற்றுகின்றேன்
செம்மையாய் செயல் புரிய வைத்திட்டால்
சிறப்பாய் என் பணி தொடர்ந்திடுவேன்.

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (5-Jan-17, 2:48 pm)
பார்வை : 108

மேலே