ஏன் கருப்பு நிறம் அழகு தெரியுமா

சருமத்தின் நிறம் அடர் பழுப்பிலிருந்து மிதமான இளஞ்சிவப்பு-வெள்ளை நிறங்கள் வரை பலவிதங்களில் உள்ளன.நிறங்களில் வேறுபாடு உள்ளதற்கான காரணம் இயற்கைத் தேர்வே

பலர் சருமத்தின் நிறத்தில் பைத்தியமாக இருப்பார்கள். சருமத்தினை வெள்ளை நிறமாக மாற்ற மற்றும் பராமரிக்க தீவிரமாக முயற்சிப்பார்கள்.தினமும் ஊடகங்களில் சருமத்தை வெண்மை நிறமாக மாற்ற கிரீம்,லோசன்,சன் ஸ்கிரீன் மற்றும் விஞ்ஞான பூர்வமற்ற பொருட்கள் ஆகியவற்றை விளம்பரப் படுத்துகின்றனர்.

சருமத்தின் நிறம் அதன் உயிரியல் மற்றும் பரிணாமங்கள் காரணமாக பழுப்பு, கருப்பு நிறமாகக் காணப்படுகிறது.மருத்துவ முறையில் வெள்ளை நிறத்தை விட அடர்ந்த(கருப்பு) நிறமே சிறந்தது என்று தெரியுமா?

அடர்ந்த நிற சருமம் சூரிய ஒளிக்கு தகுந்த மாதிரி மாறுகின்றது.மெலனின் அளவையும் அதிகரிக்கிறது.மெலனின் மற்றும் இன்ன பிற காரணிகள் இணைந்து சருமத்திற்கு இயற்கையான குடையாக அமைந்து,தீங்கு மிக்க கதிர்வீச்சு மற்றும் புற ஊதா கதிர்கள் சருமத்தில் நுழைவதைத் தடுக்கிறது.

sun burn (வெயில் கொப்புளங்கள்) ஏற்பட வாய்ப்பு குறைவு:

வெள்ளை நிறமுடைய நபர்கள் பெரும்பாலும் சூரிய ஒளி கதிர்வீச்சினால் அவர்களின் சருமத்தில் ஆரஞ்சு (அ) சிவப்பு நிறத்தில் அலர்ஜி போன்று ஏற்பட்டு வலியை ஏற்படுத்தும்.

சில நபர்களுக்கு வெயில் கொப்புளங்களைக் கட்டுப்படுத்த தீவிரமான சிகிச்சை தேவைப்படுகிறது.ஆனால் அடர்ந்த நிறம் உள்ளவர்கள் அதிக நேரம் கடற்கரையில் செலவிட்டாலும் சூரிய ஒளியின் காரணமாக கொப்புளங்கள் ஏற்படாது.

போட்டோ ஏஜிங் ஏற்படாது:

ஆழமான சுருக்கங்கள்,மூக்கு மற்றும் கன்னங்களில் ரத்தக்கசிவு,அதிக வயதின் காரணமாக ஏற்படும் புள்ளிகள்,கேரட்டோஸிசன் என்ற கடினமான செதில் மீது ரத்தக்கசிவு ஆகியவை நீண்ட கால சூரிய ஒளியினால் வெள்ளை நிறம் கொண்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த வகை மாற்றங்கள் போட்டோஏஜிங் எனப்படும்.ஆனால் அடர்ந்த நிறத்தினால் இயற்கையான முறையில் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.அதிக சூரிய ஒளியிலும் குறைவான சுருக்கங்கள் மட்டுமே ஏற்படும்.

சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு குறைவு:

வெள்ளையாக இருப்பவர்களுக்கு மெலனின் அளவு மிகக் குறைவாக இருக்கும்.அதனால் சூரிய ஒளியில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நேரிடையாக தோலில் ஊடுருவி டி.என்.ஏ -வை சேதமடைய செய்கிறது மற்றும் சில ஆபத்தான புற்றுநோய் செல்களை ஊக்குவிக்கிறது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அடர்ந்த நிறம் உள்ளவர்களுக்கு இயற்கை குடை அமைந்து கதிர்களைத் தடுத்து சருமத்தை சேதமில்லாமல் பாதுகாக்கிறது.

விரைவில் விட்டமின் டி கிடைக்கிறது :

சிவப்பாய் இருப்பவர்களை விட கருப்பாய் இருப்பவர்களுக்கு சூரிய ஒளி வேகமாக உட்கிரகிக்கப்ப்படுவதால் விரைவில் விட்டமின் டி கிடைக்கிறது. இதனால் எலும்பு பற்கள் பலமாய் இருக்கும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Jan-17, 10:46 pm)
பார்வை : 513

மேலே