மனசாட்சி

மனசாட்சி

எந்த வழக்கிலும்
சாட்சியாவதற்காக
தேடவில்லை

எந்த தவறையும் நிருபிக்கவோ
மறுக்கவோ தேடவில்லை

எவர் மீதும் குற்றம் சுமத்தவும் தேடவில்லை

மெல்லிய நூலிழை
வேலியாக இருந்தாலும்
கடக்கமுடியாதிருந்ததை
காலம்
தொலைத்துவிட்டதற்காகத்தான்
தேடுகிறேன்
மனசாட்சியை.

நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (9-Feb-17, 6:53 am)
Tanglish : manasaatchi
பார்வை : 447

மேலே