அப்பா-அம்மா விளையாட்டு

அன்றும் சரி
இன்றும் சரி
அவள் அளவுக்கு
விவரமில்லை
எனக்கு...,

அறியாத வயதிலும்
அவள் தான்-சொல்லிக்கொடுப்பாள்
நீ தான் அப்பாவாம்
நான் தான் அம்மாவாம்
நீ வேலைக்குப்
போவியாம்
நான் சோறாக்குவனாம்..

இன்றும் அப்படித்தான்
கைப்பிடித்த மகராசி-அவள்
அர்த்தமாய் சொல்லிக்
கொடுக்கிறாள்- இனி
"நீ தான்
என் அப்பாவாம்"
"நான் தான்
உன் அம்மாவாம்"...

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (17-Jun-17, 3:41 pm)
பார்வை : 111

மேலே