பிரிவும் உன் புகைப்படங்களும்
என் கைகள் தாங்கும் பணப்பையிலும் அலைபேசியிலும்
நான் மடியேந்தும் கணினியிலும் எழுதும் நாட்குறிப்பிலும்
பருவம் வாரியாக வைத்திருக்கும் உன் புகைப்படங்களை
நீ உடனில்லாத நாட்களில் பார்க்கும் பொழுது
கன்றைக் கண்டு பால் சுரக்கும் பசுவாய்
உள்ளூறும் ஆனந்தம் எனக்கு அது ஆறுதல்...