பிழை ஏது
பிழைகள் இருப்பினும்
அதையும் தாண்டி
அதன் பொருளை உணர்வோமானால்
அது தான் உண்மையான வரி .....
---
எப்படியோ அடிச்சு பிடிச்சு அந்த கூட்டத்துல பீஸ் கட்டிட்டோம்
இந்த அவர் யாரா இருக்கும் பூச் , மாரியப்பா , வந்து ,....
ஐ திங்க் வந்து ....
எஸ் .....
ஏ மழை வந்துடுத்து .....
ஜாலி ஜாலி ஜாலி .....
ஐஸ் கிரீம் சாப்பிடலாம் .....
அடுத்த நொடி கேன்டீனில் .....
என்ன வாங்கலாம் ...
எப்பயும் இங்கே வந்தே யோசிக்கிறோமேடி ...
நான் சொல்றன் நான் சொல்றன் ...
அதான் தெரியுமே ...
என்ன ?
ஸ்ட்றாபெர்ரி .....
ஹா ஹா ...இதை தான் நீ சொல்வாய் என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும் சூர்யா .....
(சூர்யாவுக்கு மிக மிக மிக ...................பிடித்த கலர் பிங்க் ...........................................)
சரி சீக்கிரம் போலாம் அப்புறம் அந்த வந்து நம்மள வெளிய நிக்கவச்சு மொத்த கிளாஸ்யே என்டேர்டைன் பண்ணும் ...
ஆமாம் டி ....வேக வேகமா ரெண்டு மாடி ஏறி போனா அதுக்கு முன்னாடி வந்து வந்துட்ருக்கே.
நாம மூணு பேருமே ஷூ போடலையா ..... இன்னைக்கு இருக்கு ?
இணைபிரியா தோழிகளே வாங்க வாங்க ....எங்க போயிருந்தீங்க பட்டுகளா .....
மெயின் பிளாக் போயிருந்தோம் மேம் ...
பீஸ் கட்ட போயிருந்தோம் மேம் ...
எச்ஓ டி பாக்க போயிருந்தோம் மேம் ...
இதுல எது உண்மை ...
நான் சொல்றன் மேம் ....
மெயின் பிளாக் ல பீஸ் கட்டிட்டு வரும் வழியில எச்ஓடி ய பாத்தோம் மேம் ...
சரி உள்ள போங்க ....
நில்லுங்க ...ஷூ எங்க ?
மேம் ....
மழைல நனைஞ்சிடுத்து மேம் ...
மூணு பேரு ஊர்லையுமே மழையா ...
ஆமாம் மேம் ......
மழை என்ன வீட்டுக்குள்ள பெய்தா ....
நோ மேம் ... நேத்து ஈவினிங் மழைல போகும் போது நனைஞ்சுடுத்து மேம் ....
எல்லோரும் லேப் போகலாம் ...போய் மூணுபேரும் கோட் போட்டுக்கிட்டு நோட் எடுத்துக்கிட்டு வாங்க ....
ஓகே மேம் ....
ப்ரொஜெக்டர பாத்து எழுதுங்க .....
சத்தம் போடாம எழுதுங்க .....
யாரு அங்க சத்தம் போடறது ஜாஸ் , பிரபா , சூர்யா வா ...
இல்லை சார் ...
இந்த தவளை வாயனுக்கு வேற வேலையே இல்லையாடி....
நம்மள தவிர எல்லாரும் பேசறாங்க ....
நாம அமைதியா எழுதறது அவனுக்கு பிடிக்கல ....
இந்த கொசு தொல்லை தாங்க முடியலடி ....
சரி எழுது ....
ஐயோ அடுத்த கிளாஸ் பூச் ....
போச் கிளாஸ் எடுத்தே சாவடிப்பாரே .....
பட் நல்லா எடுப்பார் .....யா அப்கோர்ஸ் .....
என்ன நடக்க போது
சின்ன திருத்தம் ஓடப்போது எப்பயும் போல கார் தான்...
கார் என்றால் இவ்வளவு விருப்பமோ ?
இருக்கும் உதாரணம் எல்லாமே கார் தான் ....
ச்சச்ச
என்னடி ....
எப்பையும் போல இந்த நமீ குட்டிஸ்
அத எடுத்தா இத எடுத்தானு ....
இப்ப என்ன வேணுமாம் ......
நம்ம போட்டோ வேணுமாம் ......
ஏற்கனவே கொடுத்தது என்னாச்சாம் ....
வைரஸ் காய்ச்சல் தான் .....
நாம போகும் போது செல்வி (செல்பி) எடுத்து கொடுத்துடுவோம் .....
இல்லனா விட மாட்டாளுங்க ....
என்னடி என் பேர சொல்லிட்டிருக்கிங்க .
உங்கள கடத்தப்போறோம் .....
என்ன கடத்தனா பத்து பைசா தேறாது .... இவளை கடத்துங்க .....
ஜாஸ் பிரியாணி தரேன்னு ஏமாத்திட்டயேடி ....நல்லா கேளுங்க ....
ஹா ஹா ....
செல்பி எடுக்கலாம்னு சொல்லிட்டு இருந்தோம் ......
---
யாரையும் துன்புறுத்தாமல் மகிழ்ந்திடுங்கள் ...
பிழை என்பது எழுத்தில் வந்தால் திருத்திடலாம் ....மனதில் இருந்தால் மாற்றுவது கடிது ...
மனதை பண்படுத்துங்கள் நல்ல நட்புகளோடு ....சிறந்த நண்பன் ஒரு சிறந்த புத்தகம் ....

