நிஜமாகவே நீ கிறுக்கிதான்

இரண்டு நாட்கள் பார்க்கவில்லை
பேசவில்லை, என்பதற்காய்
இப்படியா அடம்பிடித்து அழுது
ஆர்ப்பாட்டம் பண்ணுவாய் கிறுக்கி !

திருமணத்திற்கு பின்பு
ஆடி மாத கதையை சொன்னதும்
ஆடிப்போய்விட்டாய் !

அதனால் என்ன ?

ஆடிமாதத்தில் மட்டும் எங்காவது
ஓடிப்போகலாம் என்கிறாய் !

நிஜமாகவே நீ கிறுக்கிதான் !

எழுதியவர் : முபா (18-Jul-17, 12:27 pm)
பார்வை : 188

மேலே