வைகோ ஒரு வரலாறு
அன்புள்ள தோழர்களே ,
உங்கள் இரண்டு நிமிடத்தை இதை படிப்பதற்கு செலவிடுங்கள் .கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு அரசியியல் மாற்றம் நடக்கும் .
திமுக மற்றும் அதிமுக விடம் தொலைநோக்கு பார்வை இல்லாததால் இன்று நாம் பல சிரமங்களை சந்தித்துக் கொண்டுள்ளோம். அதில் ஒன்று மின்சாரம். இதை போன்று இன்னும் பல பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரபோகின்றன. ஊழல்கள் லட்சங்களில் இருந்து லட்சம் கோடிகளாக மாறி உள்ளன.
இலவசங்கள் மற்றும் பணம் கொடுத்து எப்படியும் ஓட்டு வாங்கி வெல்வது என்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது. எனவே திமுக மற்றும் அதிமுக விற்கு மாற்றாக தமிழகம் மற்றும் உலக தமிழினத்தின் முன்னேற்றதிற்காக சமரசம் இன்றி போராட ஒரு மாற்று சக்தி வேண்டும் என்பது உடனடி அவசியம். மாற்றம் என்பது தானாக நிகழாது. முதலில் நாம் மாற வேண்டும். நான் ஒருவன் மாறினால் மட்டும் மாற்றம் நிகழந்து விடுமா என்றால் கண்டிப்பாக நிகழும்.
சரி எனக்கு அரசியல் பிடிக்காது என்று கூறி அரசியல் பற்றி தெரிந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தால் அரசியல் நம்மை பாதிக்காமல் விட்டுவிடுமா ?
முதலில் அரசியல் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நமது வாழ்வின் ஒவ்வொரு நொடி பொழுதையும் நிர்ணயிப்பது அரசியல். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் விலை, அந்த பொருள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பது, நமது கல்வி , நமது வேலை , நமது வருமானம், நமது செலவு, நமது வாழ்க்கை தரம் மற்றும் நமது எதிர்காலம் போன்ற அனைத்தையும் அரசியலே தீர்மானிக்கிறது .
சரி இன்றைய காலத்தில் யார் நல்ல தலைவர் என்று எப்படி அடையாளம் காண்பது?
இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் வைகோவே கீழ்க்கண்டவற்றிக்கு சொந்தகாரராக இருக்கிறார்.
>> ஊழல் கரை படியாதவர். நன்கு படித்தவர் (பட்டபடிப்பில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்).
>> குடும்ப அரசியல் செய்யாதவர் , தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்.
>> மற்ற தலைவர்களை போல் குளிர்சாதன அறையில் உக்கார்ந்து கொண்டு வெறும் அறிக்கையை மட்டும் கொடுத்துக்கொண்டு இருக்காமல் நேரடியாக களத்திற்கு வந்து மக்களோடு மக்களாக போராடும் போராட்ட குணமுடையவர்.
>> மற்ற தலைவர்கள் தாங்கள் செய்த ஊழல்களுகாக நீதிமன்றம் செல்லும் இந்த காலத்தில் , மக்கள் பிரச்சனைகளுக்காக தானே வழக்கறிஞர் ஆகி நீதிமன்றத்தில் போராடுகிறார்.
>> மிகவும் நேர்மையானவர், போராட்ட குணம் படைத்தவர் என்று முன்னாள் பிரதமர்களான இந்திராகாந்தி, லால்பகதூர் சாஸ்திரி , VP சிங்க் , IK குஜ்ரால் , நரசிம்மராவ் , வாஜ்பாய் போன்றவர்களால் பாராட்டப்பட்டவர்.
>> அண்ணன் வைகோ என்னிடம் இருக்கும் அனைத்து ஆயுத குவியல்களுக்கும் நிகரானவர் என உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் போற்றப்பட்டவர்.
>> இன்றைக்கு ஈழ தமிழர்கள் பிரச்னையை தனது அரசியல் சுய லாபத்துக்காக பயன்படுத்தும் தலைவர்களுக்கு மத்தியில் , ஈழ தமிழர்களுக்காக தனது வாழ்நாள் எல்லாம் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் களத்தில் இறங்கி போராடுபவரும் , முதன் முதலாக ஈழ தமிழர் பிரச்னையை உலக அரங்கிற்கு எடுத்து சென்றவரும் , ஈழத்தை ஆதரித்ததற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்தவரும் வைகோ தான் !
>> சொத்துக்குவிப்பு வழக்கு , ஊழல் வழக்கு என சிறை செல்லும் போலி தலைவர்கள் மத்தியில், சுதந்திர இந்தியாவில் மக்கள் பிரச்சனைக்காக அதிக நாள் சிறை சென்ற தலைவர் வைகோ ( 53 முறை சிறை சென்றுள்ளார் – நான்கு வருடங்கள் ).
>> புலிகளை ஆதரித்ததற்காக பொடா சிறை சென்ற வைகோ , நீதி மாற்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் போது தான் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் சிறையில் வாட கூடும் என்பதை உணர்ந்தும் , நான் விடுதலை புலிகளை நேற்றும் ஆதரித்தேன் ! இன்றும் ஆதரிக்கிறேன் ! நாளையும் ஆதரிப்பேன் என்று கூறி, காராகிரகம் (சிறைவாசம்) என் கால் தூசிக்கு சமம் என வாக்குமூலம் அளித்து சிறை சென்றவர் வைகோ.
>> முல்லை பெரியாறு , - கூடங்குளம் , - ஈழத்தமிழர் பிரச்சனை, - தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலை,- மூவர் தூக்கு , - காவேரி பிரச்சனை, - அமராவதி பிரச்சனை, - சேதுசமுத்திர திட்டம் கொண்டு வந்தது, -நெய்வேலி நிலக்கரி சுரங்க தொழிற்ச்சாலையை தனியார்மயம் ஆகாமல் தடுத்து பல லட்சம் தமிழர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியது ,- மக்களின் வாழ்வை சீரழிக்கும் மதுவிலக்கு போராட்டம்,- என தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் , அதற்காக முன்னின்று போராடும் முதல் நபர் வைகோவே .
>> தனது பிறந்தநாளை அந்த நாளாக கொண்டாடு , இந்த நாளாக கொண்டாடு என கூறி தனது பிறந்தநாளையே மாநாடு போல கொண்டாடி தொண்டர்களை சொம்பு தூக்கிகளாக மாற்றும் தலைவர்கள் மத்தியில் , தனது பிறந்தநாளை தானும் கொண்டாடாமல் , தொண்டர்களையும் கொண்டாட அனுமதிக்காமல் எளிமையை கடைபிடிக்கும் தலைவர் வைகோ.
>> தொழிலாளர் தினமான மே முதல்நாளை விடுமுறை தினமாக இந்தியா முழுவதும் அறிவக்க செய்து தொழிலாளர்களின் சிறப்பை பறைசாற்றியவர் வைகோ.
>> பிறப்பிலேயே கோடீஸ்வரனாக பிறந்த வைகோ இன்றைக்கு மக்கள் போராட்டங்களுக்காக தனது சொத்தை பெருமளவு இழந்து நிற்பதோடு மட்டுமல்லாமல் , தான் கட்சி தொடங்கும் போது தனது சொத்து மதிப்பை வெளியில் காட்டிவிட்டு அரசியல் கட்சி தொடங்கிய முதல் நேர்மையாளர் வைகோ.
>> நாறப்த்தைந்து வருடங்களுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் வைகோ , தனியாக கட்சி ஆரமித்து இருபது வருடங்கள் ஆகிறது. கட்சி தொடங்கிய அடுத்த நாளே வரும் தேர்தலில் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என அறிக்கை விடுபவர்களுக்கு மத்தியில், பதவிகளுக்கு பின்னால் செல்லாமல் மக்களுக்காக எந்த ஒரு அதிகாரமிக்க பதிவிலும் இல்லாமல் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுபவர் வைகோ.
>> மனிதநேயர் வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது வைகோ அவர்களை பார்த்து பிரதமர் பதவி மற்றும் ராணுவ அமைச்சர் பதவியை தவிர எந்த அமைச்சர் பதவியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று கூறிய போதும் , தான் அமைச்சராகி பதவியை அனுபவிக்காமல் தன்னோடு கழகத்துக்காக பாடுபட்டவர்களை அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தவர் வைகோ. “வருங்கால முதல்வர் வைகோ வாழ்க” என்ற கோஷத்தை கூட வெறுக்கும் விந்தை மனிதர் வைகோ.
>> தமிழகத்தில் இருபதாயிரம் கிராமங்களுக்கு மேல் வைகோ சென்றுள்ளார். மக்கள் பிரச்சனைக்காக போராட்ட களங்களில் நிற்கும் போது தனது கழக கொடியையோ, அல்லது தான் சார்ந்து நிற்கும் கழகத்தையோ முதன்மை படுத்தாமல் மக்களை ஓரணியில் திரட்டி போராட்டம் நடத்தும் குணமுடையவர் வைகோ.
>> தமிழ்நாட்டு மாணவர்களை பொறுக்கிகள் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், உலகிலேயே அதிக மதிநுட்பம் படைத்த மாணவர்கள் தமிழ் மாணவர்கள் தான் , அவர்களுக்கு எங்கு சென்றாலும் வரவேற்ப்பு உண்டு என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் தன்னை சந்திக்க வரும் மாணவர்களிடம் அரசியல் பேசாமல் தாய் தந்தையை முதலில் காப்பாற்று என்று கூறும் கண்ணியம் வைகோ வை தவிர எந்த அரசியல்வாதிக்கும் இல்லை.
>> தனது தொகுதிக்கு வாக்கு சேகரிக்க மட்டும் வரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் , தனது தொகுதி மக்களுக்காக அனைத்து நல திட்டங்களையும் பெற்று தருவதோடு மட்டுமல்லாமல் , தான் எம்பி ஆன விருதுநகர் தொகுதியில் உள்ள நாற்பதனாயிரம் குழந்தைகளுக்கும் மேல் போலியோ தடுப்பு சொட்டு மருந்தை கொடுத்தவர் வைகோ.
>> தான் ஏதாவது ஒரு சிறிய நலத்திட்டத்தை அரசாங்க பணத்தில் தொடங்கி வைத்தாலும் விளம்பரம் தேடுபவர்களுக்கு மத்தியில் , மறுமலர்ச்சி இரத்ததான முகாம் என்ற ஒன்றை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி ஏழைகளுக்காக இலவசமாக இரத்தம் கொடுப்பவர் வைகோ. இதில் எந்த அரசியல் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து இளைஞர்களை இரத்தம் கொடுக்க ஊக்குவிப்பவர் வைகோ.
>>தமிழ் இலக்கிய , இலக்கணங்களை முழுமையாக கற்று தேர்ந்து அழகு தமிழை மேடைகள்தோறும் முழங்கி வருபவர் வைகோ. இன்றைக்கு அரசியல் கட்சி நடத்தும் தலைவர்கள் பலருக்கு தமிழ் இலக்கிய இலக்கணங்களின் அரிச்சுவடு கூட தெரியாது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.
இத்துனை சிறந்த பண்புகளையும், போராட்ட குணம் படைத்தவருக்கும் நாம் வாய்ப்பு கொடுக்காமல் விட்டோம் என்றால்......
நமது பிள்ளைகள் வாழும் எதிர்காலத்தில் வரும் அடுத்த அரசியல் தலைவர்களின் எண்ணம் எவ்வாறு இருக்கும் என்றால்..." வைகோவை போன்று நேர்மையாக இருந்தால் அரசியலில் வெல்ல முடியாது என்ற எழுதபடாத விதி உருவாகிவிடாதா ??????
அப்படி ஒரு எண்ணம் உருவானால் அந்த அரசியல் தலைவர்களுடைய செயல்பாடுகள் எவ்வுளவு மோசமானதாக, அயோக்கியதனாமாக இருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
மாற்றம் வேண்டும் எண்ணம் கொண்ட இளைஞர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் சிதறி கிடக்கிறார்கள். இன்றைய கணிபொறி உலகில் facebook போன்றவற்றில் ஒருங்கிணைப்பது என்பது சுலபம்.
நாம் படித்து கொண்டு இருக்கலாம் அல்லது வேலை செய்து கொண்டு இருக்கலாம். களத்திற்கு செல்ல முடியவில்லை என்றாலும் Facebook ல் நமது செயல்பாடுகளை செய்யலாம்.
Facebook மூலமாக ஒரு ஆரசியல் மாற்றத்தை கடந்த ஆண்டு எகிப்தில் நடத்தி காட்டினார்கள் என்பதை நாம் அறிவோம்.
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னதமான கடமை படித்த இளைஞர்கள் கையிலேயே இருக்கிறது.