வெறுத்துப்போன வாழ்க்கை

பிரட்டிப் போட்ட
தோசை
பசியைக் கிளப்பியது
தொட்டுத்
தின்னச்
சம்பலைத்தேடி…

ஏதோ வெட்டிப்
பிடுங்கின பிரமையில்
எலும்பு
முறிந்தவர் போல்
பின்னுக்கு
வழைந்தபடி
எதிரில் கிடந்த
சோபாவில்
எட்டிச்
சரிந்த
கருசனையான
புருசன்….

சுவரில்
சாத்திக் கிடந்த
பிரம்பை
சும்மா தான்
நான்
பார்த்தேன்
அது
என்னையேன்
பார்க்கிறாய்
என்றது……

வெளுக்க வேணும்
என்று கொண்டு வந்த
வெள்ளைத்
துணிகளெல்லாம்
மூலையில் கிடந்து
சுவரில்
முட்டி மோதி
முணுமுணுத்தது….

துறப்புத் துறப்பு
என்ற
கொறட்டைச் சத்தத்தில்
பக்கத்திலிருக்கப்
பயந்த பூனை
பயந்தே
ஓடி ஒளித்தது…..

சாப்பாடு
கேட்டுவந்த
பிள்ளைகளின்
கூப்பாட்டில்
நித்திரையைக்
கட் பண்ணி
வீட்டுக்குத்
திரும்பி வந்த
சீமானின்
சொந்தக் குரல்

தோசை ரெடியோ என்றது…..

வெங்காயமே
இனித்தான்
உரிக்கோணும்
என்றேன்…….

வேலைக்கு போகும்
பெண்ணின்
வெறுத்துப் போன
வெளி
நாட்டு வாழ்க்கை இது…..

எழுதியவர் : (24-Oct-17, 4:53 pm)
பார்வை : 3477

மேலே