கடவுளே

(எழுத்து இணையதள உறவுகளுக்கு வணக்கம். இன்று நான் சமர்பிக்க இருக்கும் கதை என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். )

அன்று ஒருநாள் நானும் என் நண்பர்களும் ஒரு நாள் என் கல்லூரி அருகே உள்ள கோவிலுக்கு புறப்பட்டோம். நாங்கள் அன்று கோவிலுக்கு அவசரமாக சென்றுக் கொண்டு இருந்தோம். "அப்போது எங்களின் மத்தியில் தம்பி என்ற அழைப்பு சத்தம் கேட்டது". உடனே நாங்கள் அனைவரும் திரும்பி பார்த்தோம். அப்போது ஒருவர் எங்களை நோக்கி எங்கள் அருகாமையில் வந்தார். வந்தவர் எனக்கு பசிக்கின்றது. உங்களிடம் பணம் இருந்தால் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டார். எங்கள் நண்பர் கூட்டத்திற்கு பணத்தை பரிசாகவோ, அன்பளிப்பாகவோ கொடுப்பது பிடிக்காது. நான் உடனே எங்களிடம் பணம் இல்லை. ஆனால் சோறு இருக்கின்றது. கொடுக்கட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர் வயிறு நிறைந்தால் போதும். கொடுப்பா என்றார். அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு பின்னர் கோவிலுக்கு சென்றோம்.

நானும் சரி. என் நண்பர்களும் சரி. எங்கு சென்றாலும் அங்கு மகிழ்ச்சியை மட்டுமே காண வேண்டும் என்று நினைப்போம். அதே போன்று பிறருக்கு மகிழ்ச்சியை கொடுப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைவோம். பிறகு நாங்கள் கோவிலின் உள்ளே சென்றோம். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தோம். அதன் பிறகு "தெய்வ தரிசணம் காண சென்றோம்". அங்கு தரிசணம் செய்ய ரூபாய் 50 என்ற பெயரில் ஒரு வரிசையும், ரூபாய் 100 என்ற பெயரில் ஒரு வரிசையும், ரூபாய் 500 என்ற பெயரில் ஒரு வரிசையும் இருந்தது. கடவுளைக் காண கட்டணம் செலுத்த வேண்டுமா? என்ற ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. அதே சமயம் எல்லா வரிசைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.


இது சரிபட்டு வராது என்று நானும், என் நண்பர்களும் வெளியே வந்து வந்துவிட்டோம். பிறகு கோவிலில் இருந்து வெளிவந்தோம். அப்போது "கடவுளே" என்று என்ற ஒரு ஓசை கேட்டடது. நாங்கள் யார் என்று திரும்பி பார்த்தோம். அங்கு பார்த்தால்! நாங்கள் வரும் வழியில் எங்களிடம் உணவு கேட்டவர் எங்களை நோக்கி அருகில் வந்தார். வந்தவர் மீண்டும் ஒருமுறை கடவுளே என்று கைக்கூப்பி எங்களை வணங்கினார். அவர் சென்ற நொடியில் இருந்து நாங்கள் அனைவரும் இவர் ஏன் இப்படி அழைத்தார்? என தெரியாமல் பெரும் குழப்பம் கொண்டு சிந்திக்க தொடங்கிவிட்டோம்.

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (31-Jan-18, 7:44 pm)
Tanglish : kadavule
பார்வை : 387

மேலே