தங்கமும் மனிதனும் கட்டுரை

பூமியே தாயாகி மண்ணும் கல்லும் உடன் பிறப்பாகி
அன்புடன் ஆசையுடன் வளர்ந்து வந்த என்னை
உலகில் உள்ளோர் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டனர்

தங்கமே தங்கம் என்றழைத்து பக்குவமாய் தோண்டி எடுத்து
பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்தனர்
ஆழ் மண்ணில் விளைந்த நான் திடகாத்திரம் திமிர்
அசைக்க முடியா ஆணவம் கொண்டிருப்பதேனோ உண்மைதான்
அந்த உறுதியும் என் பெருமையும் விலைமதிப்பிட முடியாத அளவுக்கு என்னை உயர்த்தி விட்டன
பின் சொல்லவும் வேண்டுமா/ மக்களிடத்தில் நான் சொர்க்கத்தங்கம் ஆனேன்.

மனிதன் என்னை பக்குவப படுத்தி என் பெருமையை உலகம் வியக்கும் வண்ணம் மெருகூட்டி
ஆபரணங்கள் செய்யத் தொடங்கினான் . அதன் பின் நான் கொள்ளை அழகாகி விட்டதை
எண்ணி எண்ணி பூரிப்படைந்தேன்
என் பூரிப்பில் மேலும் அழகானேன்,
விடுவானா /மனிதன் ஒப்பற்ற விலையில் என்னை உயர்ந்து நிற்க விட்டான்
அன்று உயர்ந்த நான் இன்னும் உயர்ந்து கொண்டுதான் போகிறேன்
இந்நிலை என்றைக்கும் மாறாது, விலை உயர உயர என்ககு மவுசும் கூடிக் கொண்டுதான்....

என்னை விதம் விதமாய் அணியும் பெண்களின் மகிழ்ச்சி எனக்கு கண்கொளாக் காட்சியே .
இருந்தாலும் வாழ்ந்தாலும் என்னைப் போல் வாழவேண்டும் .
இது தங்கத்தின் பெருமிதம் .
என்றும் தங்கம் தங்கம்தான் தரத்தினில் குன்றாத
தான்தோன்றித்தனம் , தங்கத்தின் தலைக்கனம்.
தங்கமே தங்கமே தரம் பார்த்து நடக்க உனக்கு தெரியாது
ஆனாலும்
நீதான் தரம்பார்க்கும் மனிதனின் கைப்பிள்ளையாயிற்றே .

தங்க மகனே/ தங்க மகளே/ என்று தாலாட்டி குழந்தைகளை தூங்க வைக்கும்
மக்களுக்கு நீ செய்யும் பேருதவி உன் பெயர் சொல்ல கொடுக்கின்றாய்
அதுதான் என்றும் எல்லோர்க்கும் நாவில் இனிக்கின்றாய் நிம்மதியை தருகின்றாய் .
ஏழைகளுக்கு எப்போதும் நீ எட்டாக்கனியே ,
சொத்திலே செல்வம் நீ, சொல்லிலே அமுதம் நீ .
ஏன் உலகமே உன்னை வாஞ்சையுடன் தங்கமே என அழைக்கின்றது
.நீயில்லாத இடத்திலும் உன் நாமம் ஒலிக்கின்றது .
தங்கமே என் தங்கமே என உளமார உன் பெயரால் குழந்தைகளை வாழ்த்துகின்றனர் .
தங்கமே உனக்கு என்றுமில்லை உயர்வில் கட்டுப்பாடு ..
நீ என்றும் நீயே, தரம் குன்றா செல்வம் நீயே /
தங்கம் என்றும் தங்கம்தான்
மாற்றுக் குறையாத செல்வம் தங்கம் மட்டுமே

எழுதியவர் : பாத்திமாமலர் (29-Jul-18, 12:40 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 277

மேலே