இட ஒதுக்கீடு பற்றிய என் பார்வை

இடஒதுக்கீடு,காலம் தொட்டு தொடர்ந்து வரும் ஒரு முறை .
நான் கல்வித்துறை மற்றும் நிர்வாகத்துறையில் உள்ள இடஒதுக்கீட்டை பற்றி மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்,
இட ஒதுக்கீட்டால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது என்பதே என் கருத்து, உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் மாணவனின் தந்தையோ அல்லது தாயோ இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி வாழ்வில் ஒரு நிலைக்கு சென்று விட்டனர் என எடுத்துக்கொள்வோம்,அந்த சூழ்நிலையில் வளரும் அந்த மாணவனின் எண்ணம் என்னவாக இருக்கும் சிந்தித்துது பாருங்கள் சிறுது நேரம்,அந்த மாணவனின் எண்ணம் கண்டிப்பாக நாம் ஓரளவு மதிப்பெண் பெற்றாலே போதும் என்ற மனநிலையில் தான் இருக்கும், அதற்காக நான் இடஒதுக்கீட்டை வேண்டாம் என்று விலக்கவில்லை,இடஒதுக்கீடு என்பது ஒரு நாட்டிற்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முக்கியமானது ,இடஒதுக்கீடு வேண்டும் ,ஆனால் ஒரு குடும்பத்தில் உள்ள முதல் பட்டதாரிக்கே அது கிடைக்க வேண்டும் .இப்படி ஒரு சட்டம் வந்தால் மாணவர்களின் கல்வி நலம் பாதிக்காது ,ஆனால் இடஒதுக்கீடு தற்போது அரசியலாகி விட்டது ,ஓட்டிற்காக அனைத்தையும் விற்க்கும் நிலை வந்துவிடுமோ என்ற பயம் என்னை போன்ற அனைவரிடமும் கண்டிப்பாக உருவாகி இருக்கும் .நிலைமை கண்டிப்பாக மாறும் என்ற எண்ணத்துடன் ,
உங்களில் ஒருவன் .

எழுதியவர் : Mano (17-Aug-18, 12:46 pm)
சேர்த்தது : Mano
பார்வை : 69

மேலே