நானறிந்த தீபாவளி

மனிதனாய்ப் பிறந்த நம்
ஒவ்வொருவர் உள்ளும்
ஒரு நரகாசுரன் ஒளிந்துகொண்டு
இருக்கிறான்-காம,க்ரோத
லோப மோகமாய் , நம்
மனதின் இருளாய் -இந்த
நரகனை நாம் அடக்கி ஆளவேண்டும்
இல்லை முற்றும் அழித்துவிடலே நலம்
ஞான ஒளிகொண்டு.............
நரகன் அடங்கிவிட்டால், அல்லது
அழிந்தே விட்டாலும் நமக்கு
தீபாவளி......................ஆம் ஞானம்
பேரொளி அல்லவா ........

வீட்டில் பரவி இருக்கும் இருளை
போக்கிடலாம் ஒளி விளக்கால்
தீபா ஒளிகொண்டு ,தீபாவளியாய்

உடம்பாம் நம் வீட்டின் அக
இருளை போக்கிடுவோம்
ஒழுக்கத்துடன் வாழ்ந்திடுவோம்
நித்தியம் தீபாவளி கொண்டாடுவோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Nov-18, 7:38 pm)
பார்வை : 422

மேலே