அங்கே யாவரும் நலமா ?

அங்கே நிறங்கள் பேதமில்லை ;
மதங்கள் மண்டியிட்டே தீரும் ;
சிலசமயம் நிற்கவும் செய்யும் ;
பல முறை காத்திருக்கவும் செய்யும் ;
சாதிகள் சதை நோக்கி நகரும் ;
சப்தமே மொழியாகும் ;
நிறைய கலபினம் ஐக்கியமாகும் ;
வெண்மை ஒன்றே நிறமெனப்படும் ;
இருள் அங்கே கேள்வி ஆகும் ;
அடிமனம் கையடக்கமாகும் ;
இலக்கணம் சங்கத்தை எதிர்க்கும் ;
இலக்கியம் மீண்டுமொருமுறை இயற்றப்படும் ;
கால அளவு கைப்பையினில் வேறுரு பெறும் ;
நேருக்கு நேர் விழி பாரா;
அங்கே அதற்கு அவசியமும் நேரா ;
முடியும் வரை முகவரி இல்லை ;
முடிந்த பின்பு அங்கு இடங்களே இல்லை ;
எதிரெதிர் இயக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் ;
ஓய்வு என்பதே வேலை ஆகும் ;
வேலை என்பதே இயக்கம் ஆகும் ;
பாலின பாகுபாடும் சிலசமயங்களில் இல்லை ;
எதுவானதும் அதுவே ஆகும் ;
பேரழகிற்கும் பஞ்சம் இல்லை ;
அங்கு விழிகளும் இல்லை ;
நிறைய உண்டு இதுபோல -அங்கே
இயங்கிக்கொண்டிருக்கும் மர்மங்களில் ....

எழுதியவர் : விவேக் பிரசன்னா (7-Sep-11, 2:03 pm)
பார்வை : 244

மேலே