ஆக்குபவர்கள்

திட்டாதே தீயவரை,
அவர்கள்தானே
ஆக்குகிறார்கள் மனிதனை-
மனிதனாகவும், தெய்வமாகவும்..

சூழ்ச்சிமிகு மந்தரையும்
சூர்ப்பனகையும்,
சிந்தை மாறிய இராவணனும்
சேர்ந்துதானே
இறைவனாக்கினர் இராமனை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Nov-19, 11:24 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 121

மேலே