ஹைக்கூ கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
மறந்து சென்றதால்
புதியது வாங்கி வாங்கி
பத்தாகிவிட்டது முகக்கவசம் !
வசதியாகத்தான் உள்ளது
சிலருக்கு தெரிவதில்லை அடையாளம்
முகக்கவசம் !
அன்று கொள்ளையருக்கு
இன்று எல்லோருக்கும்
பயன் முகக்கவசம் !
அன்று அணிவதோ குற்றம்
இன்று அணியாதது குற்றம்
முகக்கவசம் !
பல நல்லவர்களாலும்
சில கெட்டவர்களாலும்
நிறைந்தது காவல்துறை !
காவல்துறை மட்டுமல்ல
எல்லாத்துறையிலும்
உண்டு சில கெட்டவர்கள் !
பணக்காரன் பணத்தால் வாழ்கிறான்
ஏழையோ பட்டினியால் சாகிறான்
கொரோனா கொடுமை !
ஊரடங்கு ஊரடங்கு
என்று சொல்லியே
அடங்கிவிடும் போல உயிர் !
தனித்திரு விலகியிரு
வீட்டிலேயே இரு
பட்டினி இரு !
தங்கம் விலை
கூடக் கூட
வன்முறை கூடும் !
அடக்கவிலை ஒருமடங்கு
விற்பனைவரி மூன்றுமடங்கு
பெட்ரோல் விலை நான்கு மடங்கு !