கல்விச்செல்வம்
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது ஆன்றோர் வாக்கு.
முகத்தின் அழகு காண, தேவை ஒரு 'கண்ணாடி,'
அகத்தின் அழகுதனை காண
தேவை ' கல்வி '
என்றுமே உன் முன்னாடி !
பொருள் கொண்டோருக்கு உள்ள உறவிடையே ' மதிப்பு ",
கல்வியறிவு கொண்டோர்க்கு,
செல்ல விழையும் இடமெங்கும்
' சிறப்பு '!.
இவ்வுலகில் 'கண்ணில்லாதவன், பிழைப்பதும் ',
காதில்லாதவன் ' செழிப்பதும் ',
கை கால் ஊனமுற்றோர்
' உயிர் தழைப்பதும் ' கூட
கல்வி அறிவினால்தான்.
ஆனால் , எல்லாம் இருந்தும்,
அவ்வறிவு இல்லாதவன், கண்ணிருந்தும் ' குருடர் '
காதிருந்தும் ' செவிடர் '
கை கால்கள் இருந்தும் ' வீணர் '.
' பணம் ' உள்ளவன் ' வளமாவான் '. வீரமுள்ளவன் ' பலமாவான் '
கல்வியறிவுள்ளோன்
' நலமாவான் '.
எனவே, கசடற அக்கல்வியை கற்று,
கற்ற அறிவை நல்வழியில், நன்முறையில், விற்று,
எல்லா நலன்களையும் பெற்று,
சீருடன் வாழ்வோம் இன்புற்று,
வாழ்வோம்."
" வாழ்க கல்வி "