ஆணிவேர்
நம் பின்வரும்
சந்ததியைக் காணும்
பேரு பெற்றவர்
இப்புவியில் யாரும்
இல்லை...
தம் முன்னோர்களைப்
பற்றி முழுமையாக
அறிந்த மானுடர்
யாரும் இல்லை
இப்புவியில்...
இப்புவிதனில் நாம்
வாழும் வாழ்க்கை
ஈரைம்பது வருடங்களுக்கும்
மிகக் குறைவே...
அவ்வாறான வாழ்வில்
சக மனிதரோடு
தோளோடு தோள் சேர்த்து
மனிதம் மறக்காமல்
நாம் வாழும் வாழ்க்கையே,
நமைப் புவியில்
வாழச்செய்த இறைக்கு
நாம் அளிக்கும்
பெரும் காணிக்கை.
அல்லாது நாம்
சேர்ப்பிக்கும் பாபப்
பணமோ, பொன்னோ,
வைரமோ அல்ல...