கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்

அமுதம் கடைந்தெடுக்க
அசுரனின் துணைவேண்டும்

அள்ளி பருகிடவோ
அமரனே போதுமென்றும்

ஆளுக்கொரு நியாயம்
ஆண்டவனா வகுத்திடுவான்?

அத்துமீறி நுழைத்தவனின்
அசுரத்தலை கொய்யாமல்

ஆள்மாறாட்டம் அரங்கேற
அவனே அனுமதித்தான்

ஒருவாய் அமதமேனும்
உழைத்தோர்க்கு கிடைத்திடவே

உண்மை மனத்தோடு
உழைப்புசுரண்டலை தடுத்துநின்றான்

நவகிரக கூட்டத்தோடு
நலிரண்டு பாம்பும்சேர

நல்லதொரு நாடகமாடி
நற்துணையாய் தானேநின்றான்

நாயகன் நடுவனென்று
ஞாலத்தோரும் சொல்லிடவே

நடந்த கலகத்தாலே
நன்மையையும் நடந்ததன்றோ

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (29-Aug-24, 8:14 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 19

மேலே