நன்மதி வெண்பா - நூல் - பாடல் 87
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
விரிதிசைசூழ் பாராளும் வேந்த னருகிற்
பிரதானி யின்மை பெரியோர் - கருதித்
துதிக்கைபெறு நன்மதியே துன்னுமத வேழம்
துதிக்கையின்றி நிற்றலெனச் சொல்! 87