வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

எழுதியவர் : (5-Dec-09, 3:37 pm)
பார்வை : 721

மேலே