மறந்தது ஏனடா?
ஆவல் இருப்பின் உறவாட,
ஆசைபிறக்கும் என்றாய்.
உறவாட கொஞ்சம் உரையாடல்
தேவை என்றாய்.
உணர்வுகள் உறவாட,
ஊடகமாய் உடல் தேவையா?
என்றொரு வினா பிறக்கச்செய்தாய்.
புரியாத புதிர் சொல்லி
விடைதேட ஊக்குவித்தாய்.
வள்ளுவனை நட்பாக்கி
உள்ளத்திற்கு உரமும் தந்தாய்.
எல்லாம் நீ என்று
பொது உடைமை காத்து நின்றாய்.
நட்பாக வந்தவனே
ஏனடா எனை மறந்தும் சென்றாய்?.