பிடிக்காத திருமணம்

பார்த்து பார்த்து
செய்கிறார்கள்
மணத்தை பெண்ணின்
மனம் மறந்தவர்கள்.......!

ஆயுள் கைதியாய்
செல்கிறாள்
ஆசிர்வாதத்தோடு .......!

மேளம்
வாசிக்கப்படுகிறது
அவன்
வாழ்க்கை பயணத்திற்கும் ......!
அவள்
வாழ்வின் மரணத்திற்கும் ....!

மாட்டிற்கு
முகனக் கயிறு .....
பெண்ணிற்கு
மஞ்சள் கயிறு......!
பிடித்தாலும்
பிடிக்காவிட்டாலும் ......
அடிமையாய்
ஒருவன்இடத்தில்.....!!!

எழுதியவர் : anu (1-Sep-10, 6:01 pm)
பார்வை : 847

மேலே