பெண்

அன்பு தெய்வமாய் இருப்பவளும் பெண்தான்;
அனாதையை வீதியில் கிடப்பவளும் பெண்தான்!
அலுவலகத்தில் ஆட்சியாளராய் மிளிர்பவளும் பெண்தான்;
அடுப்படிபுகையில் வெந்து மடிபவளும் பெண்தான்!
விண்வெளிக்கு சென்று திரும்பியவளும் பெண்தான்;
வீட்டினுள் அடிவாங்கி அழுபவளும் பெண்தான்!
பேருந்துஓட்ட உரிமை பெற்றவளும் பெண்தான்;
பேருக்குநான்கு பிள்ளைகள் பெற்றவளும் பெண்தான்!
பேயிடம் பேச்சுவார்த்தை நடத்தியவளும் பெண்தான்;
பேசதெரிந்த ஊமையாய் வாழ்பவளும் பெண்தான்!
நிலத்திலே அடிமைத்தளையை உடைத்தவளும் பெண்தான்;
நித்தம் அடிமையாய் பிழைப்பவளும் பெண்தான்!

எழுதியவர் : சேஷராஜன் பி (15-Feb-12, 10:40 am)
பார்வை : 260

மேலே